சீனா அடுத்த மூவாண்டில் ஆபிரிக்க நாடுகளின் மேம்பாட்டுக்கு 60 பில்லியன் டொலர் நிதி வழங்க உறுதியளித்துள்ளது. நிதியுதவி, முதலீடு, கடன் என 3 வகையாக அது வழங்கப்படும்.
சீன–ஆபிரிக்க ஒத்துழைப்பு தொடர்பான 2 நாள் கருத்தரங்கில் பேசிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அதனைத் தெரிவித்தார்.
அடுத்த 3 ஆண்டுகளில் ஆபிரிக்காவில் குறைந்தது 10 பில்லியன் டொலர் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்று சீன ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.
ஆபிரிக்கக் கண்டத்தின் பெரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா முக்கியப் பங்கு வகித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் நடந்த சீன–ஆபிரிக்கக் கருத்தரங்கிலும், 60 பில்லியன் டொலர் நிதியைச் சீனா வழங்கியிருந்தது.
இந்நிலையில் மேலும் 60 பில்லியன் டொலர் வழங்க உறுதியளிக்கப்பட்டது.
சீன முதலீடுகளுக்கு அரசியல் நோக்கம் ஏதுமில்லை என்று ஜனாதிபதி ஷி கூறினார்.
சீனா, ஆபிரிக்க நாடுகளைக் கடன் வலையில் சிக்கவைப்பதாக எழுந்த குறைகூறல்களைத் தணிக்கும் முயற்சியாக அது கருதப்படுகிறது.
Add new comment