அமெரிக்க பகிரங்க டென்னிஸ்:ஷரபோவா அதிர்ச்சி தோல்வி;சிலிச் கால் இறுதிக்கு தகுதி- ‌ | தினகரன்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்:ஷரபோவா அதிர்ச்சி தோல்வி;சிலிச் கால் இறுதிக்கு தகுதி- ‌

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் சிலிச் 7-–6, 8-–6, 6-–2, 6-–4 என்ற கணக்கில் டேவிட் கோபினை வீழத்தி கால் இறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷரபோவா அதிர்ச்சிகரமாக தோற்றார்.கிராண்ட்சலம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடைபெற்றுவருகிறது.7-வது வரிசையில் இருக்கும் சிலிச் (குரோஷியா) 7-–6, (8-–6), 6-–2, 6-–4 என்ற கணக்கில் 1–0-வது வரிசையில் இருக்கும் டேவிட் கோபினை (பெல்ஜியம்) வீழ்த்தினார். அவர் கால் இறுதியில் நிஷி கோரியை (ஜப்பான்) சந்திக்கிறார். நிஷிகோரி 6-–3, 6-–2, 7-–5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரர் பிலிப்பை தோற்கடித்தவர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சம்பியனும், தர வரிசையில் 22-வது இடத்தில் இருப்பவருமான ‌ஷரபோவா (ரஷ்யா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் 6-–4, 6-–3 என்ற நேர்செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) 6-–1, 6-–3 என்ற கணக்கில் சிபுல்கோவாவையும் (சுலோவாக்கியா), நவ்மி ஒசாகா (ஜப்பான்) 6-–3, 2-–6, 6-–4 என்ற கணக்கில் ‌ஷப்லென்காவையும் (பெலரஸ்), லெசியா சுரென்கோ (உக்ரைன்) 6-–7 (3-–7), 7-–5, 6-–2 என்ற கணக்கில் வான்ட்ரோ கோவாவையும் (செக்குடியரசு) தோற்கடித்து கால் இறுதியில் நுழைந்தனர். கால் இறுதி ஆட்டங்களில் சுராஸ்-கெய்ஸ், ஒசாகா- சுரென்கோ மோதுகிறார்கள்.


Add new comment

Or log in with...