விளையாட்டு போட்டிகளில் பிரகாசித்த முந்தல் பிரதேச செயலக வீரர்களுக்கு வரவேற்பு | தினகரன்


விளையாட்டு போட்டிகளில் பிரகாசித்த முந்தல் பிரதேச செயலக வீரர்களுக்கு வரவேற்பு

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

புத்தளம் மாவட்டச் செயலாளர் வெற்றிக் கிண்ணத்துக்கான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் அதி௯டிய இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ள முந்தல் பிரதேச செயலக வீரர்களை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

முந்தல் பிரதேச செயலாளர் ஏ.எம்.சி.எம். பிரேமசூரிய தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எச்.எம்.எம். ஹேரத், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ். முஹம்மட் அஸ்மில் , நிர்வாக உத்தியோகத்தர் டபிள்யூ. ஆர்.ஏ. சுசிலாவதி, கிராம நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஜே.பி. ஜனக பர்னாந்து உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்ட செயலாளர் கிண்ணத்துக்கான குழு மற்றும் சுவட்டு மைதான போட்டி நிகழ்ச்சிகள் அண்மையில் வென்னப்புவ எல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது எல்லை மற்றும் கரப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் முந்தல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அணியினர் குறித்த இரண்டு போட்டிகளிலும் முதலாம் இடங்களைப் பெற்றுக் கொண்டதுடன், சுவட்டு மைதான நிகழ்ச்சிகளிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

அதனையடுத்து பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது, விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

அத்துடன், வெற்றிபெற்ற உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், எல்லே மற்றும் கரப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற உத்தியோகத்தர் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று கொண்ட உத்தியோகத்தர்களும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...