வேலூரில் நடந்த தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அமைச்சர் கே.சி.வீரமணி ‘எம்.ஜி.ஆரின் நாளை நமதே’ பாடலை பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி அசத்தினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூரில் நேற்று நடந்தது.
பொதுக்கூட்ட மேடையில் அமைச்சர் கே.சி. வீரமணி தொண்டர்களை பார்த்து கை அசைத்தப்படி, ‘‘நாளை நமதே, இந்த நாளும் நமதே... தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே... நாளை நமதே, எந்த நாளும் நமதே! தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’’ என்று பாடல் பாடினார்.
அமைச்சரின் பாடலை கேட்டு தொண்டர்கள் வியந்துபோய் ஆரவாரம் செய்தனர். அமைச்சர் வீரமணி பாடல் பாடிய வீடியோ காட்சிகள் வட்ஸ்-அப் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Add new comment