ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாங்க ரூ.4,555 கோடி தேவை-; சட்ட ஆணையம் | தினகரன்


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாங்க ரூ.4,555 கோடி தேவை-; சட்ட ஆணையம்

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ.4,555 கோடி தேவை என்று சட்ட ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் நடத்திய ஆய்வறிக்கையை கடந்த வாரம் மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில் அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நாடு முழுவதும் 10,60,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் 12,90,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 9,40,000 கட்டுப்பாட்டு கருவிகள், 12.3 இலட்சம் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றின் விலை ரூ.33,200 என்ற நிலையில் 2019ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் மொத்த இயந்திரமும் வாங்குவதற்கு 4,555 கோடி ரூபா தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் 2024ம் ஆண்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மொத்த இயந்திரமும் வாங்குவதற்கு 1,751 கோடி ரூபாவும் 2029ம் ஆண்டிற்கு 2,017 கோடி ரூபாவும் 2034ல் 13,981 கோடி ரூபாவும் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் தேர்தல் அதிகாரிகளை பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சட்ட ஆணையம் கூறியுள்ளது.


Add new comment

Or log in with...