கட்டாய நிகழ்ச்சியில் விளம்பரம் ஒளிபரப்பிய சீன தொலைக்காட்சி | தினகரன்

கட்டாய நிகழ்ச்சியில் விளம்பரம் ஒளிபரப்பிய சீன தொலைக்காட்சி

கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு மணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கால் மணிநேரம் இடைவிடாது விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதற்கு சீன அரச தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட ‘புதிய தவணையின் முதல் பாடம்’ என்ற நிகழ்ச்சியை பாலர் மற்றும் இடைநிலை பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை அரச தொலைக்காட்சியான சி.சி.டி.வி மற்றும் கல்வி அமைச்சு 2008 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 1 ஆம் திகதி ஒளிபரப்பி வருகிறது.

எனினும் இந்த நிகழ்ச்சியில் 12 மணி நேரம் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வீட்டு உபகரணங்கள், பற்பசை என்று இடைவிடாது தொடர்ந்து விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டது குறித்து பார்வையாளர்கள் முறையிட்டுள்ளனர்.

இதற்காக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் மன்னிப்புக் கெட்டுக் கொள்கிறேன் என்று அந்த தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...