பிரேசிலின் 200 ஆண்டு அருங்காட்சியகத்தில் தீ | தினகரன்


பிரேசிலின் 200 ஆண்டு அருங்காட்சியகத்தில் தீ

பிரேசிலின் மிகப் பழமையான அறிவியல் நிறுவனமான ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

20 மில்லியனுக்கும் அதிகமான பொருட்கள் சேகரிக்கப்பட்டிருக்கும் கட்டடத்தில் கடந்த ஞாயிறு இரவு ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர்.

போர்த்துக்கல் அரச குடும்பத்தின் மாளிகையாக இருந்த இந்த அருங்காட்சியகம் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே அதன் 200 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இந்த தீ கட்டடம் முழுவதும் பரவி இருப்பது வானில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன. பிரேசிலின் துக்ககரமான தினம் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி மைக்கல் டெமர், 200 ஆண்டு பணிகள், ஆய்வு மற்றும் அறிவை இழந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அருங்காட்சியகத்தில் எகிப்து கலைப்பொருட்கள் உட்பட பிரேசிலின் வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆயிரக்கணக்கான பொருட்கள் இருப்பதாக அதன் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காஸ் பிராந்தியத்தில் பழமையானதான 12,000 ஆண்டுகளுக்கு முந்திய பெண் ஒருவரின் எலும்புக் கூடு மற்றும் முக்கியமான டைனோசர் எலும்புகளும் இருந்துள்ளன.


Add new comment

Or log in with...