Thursday, March 28, 2024
Home » சீனா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச வீசா திட்டம்

சீனா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச வீசா திட்டம்

- 2024 மார்ச் 01ஆம் திகதி வரை நடைமுறை

by Prashahini
November 28, 2023 8:59 am 0 comment

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த திட்டம் எதிர்வரும் 2024 மார்ச் 01ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

இது தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலக்கம் 23/1885/602/023 மற்றும் ஒக்டோபர் 24ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் சுற்றுலாக் கைத்தொழிலை கட்டியெழுப்பும் முன்னோடி நிகழ்ச்சித்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறித்த விடயத்துடன் தொடர்புடைய நிபந்தனைகள் வருமாறு…

01. இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது அலுவல்கள், சேவைகள் மற்றும் ஆரம்ப கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டணம் இன்றி இலவசமாக வீசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

02. 2024.03.31 ஆம் திகதி வரை மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் கட்டாயம் இலத்திரனியல் பயண அனுமதிக்காக (ETA) விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

03. இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் கட்டணம் இன்றிய இலவச வீசா காலத்தை அனுபவிக்க முடியும். அத்தோடு இலங்கைக்கு வருகைத்தந்த முதல் நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இருமுறை நுழைவு வசதி வழங்கப்படுகின்றது.

04. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA)2024.03.31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.

05. வருகைத்தந்தநாளில் இருந்து 30 நாட்களுக்கான இந்த இலவச இலத்திரனியல் பயண அனுமதி (ETA)காலம் 2024.03.31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர்முடிவடையும் சந்தர்ப்பத்தில் விண்ணப்பதாரி மேலும் வீசா நீட்டிப்பைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார். எனினும், 2024.03.31 ஆம் திகதிக்குப் பின்னர் வீசாவின் 30 நாள் இலவச செல்லுபடிகாலம் முடிவடையும் சந்தர்ப்பத்தில்அதற்கான வீசா கட்டணத்தைச் செலுத்தி நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

06. தயவுசெய்து மேலே குறிப்பிடப்பட்ட ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு மாத்திரம் இந்த விசேட இலவச வீசா திட்டம் அமுலில் இருக்கும் என்பதை கவனத்திற்கொள்ளவும். ஏனைய நாட்டுப் பிரஜைகள் இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA) விண்ணப்பிக்கும் போது அமுலிலுள்ள பொதுவான நடைமுறைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT