ஆசிய விளையாட்டு விழா கோலாகலமாக நிறைவு | தினகரன்

ஆசிய விளையாட்டு விழா கோலாகலமாக நிறைவு

அடுத்த ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில்

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமாத்தராவின் தலைநகர் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு வார காலம் நடைபெற்ற18ஆவது ஆசிய விளையாட்டு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக (02) நிறைவடைந்தது.ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு விழா நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 18ஆவது ஆசியவிளையாட்டுபோட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் ஆகியநகரங்களில் கடந்தமாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவீர,வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். 40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றுபதக்கங்களும் வழங்கப்பட்டன.

கோலாகலமாக நிறைவு

இரண்டு வார காலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஆசிய விளையாட்டுவிழா நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது. நிறைவுவிழா ஜகர்த்தாவில் உள்ள 76 ஆயிரம் பேர் அமரும் இருக்கை வசதிகொண்ட ங்லோராபங் கர்னோ விளையாட்டரங்கில் கோலாகலமாக அரங்கேறியது.

இதில் இந்தோனேஷிய உப ஜனாதிபதி மொஹம்ட் யூசுப் கர்லா தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பக்,ஆசியஒலிம்பிக் குழுவின் தலைவர் தலைவர் ஷேக் அஹ்மத் அல் - பஹாத் அல்- சபாஹ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

மைதானத்தில் இலேசாக மழை பெய்தாலும் நிறைவு விழாவுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. டிரம்ஸ் கலைஞர்கள் மைதானத்தின் நடுவே 'இந்தோனேஷியா' என்ற ஆங்கில எழுத்து வடிவில் அணிவகுத்துநிற்க,வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. பின்,'ஒரேஆசியா'என்பதை பறை சாற்றும் வகையில் இந்ததொடரில் பங்கேற்ற ஒவ்வொரு நாடுகளின் தேசிய கொடி மற்றும் வீரர்,வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

இதன் பின்னர் லேசர் ஒளிவெள்ளத்திற்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்,டிரம்ப்ஸ் இசை,உள்ளூர் பிரபலங்களின் பரவசப்படுத்திய பாடல்களால் அரங்கையே அதிர்ந்தது. இந்திய பாடகர் சித்தார்த் சிலாதியா,'ஜெய் ஹோ'உள்ளிட்டசில இந்திபாடல்களை பாடி அசத்தினார். அவ்வப்போது நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கையால் இரவே பகல் போல் ஜொலித்தது. ரசிகர்களை மெய்சிலிர்க்கவைத்த நிறைவு விழா சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்றது.

அடுத்த போட்டி எங்கே?

முன்னதாக இந்த ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு பெறுவதாக ஆசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஷேக் அஹ்மத் அல் - பஹாத் அல்- சபாஹ் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். போட்டியை நடத்தியதில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிஎன்று இந்தோனேஷியாவை பாராட்டிய அல் பஹாத்,'இந்த அழகான தேசத்தை விட்டுநாங்கள் வருத்தமுடன் செல்வதால்தான் வானமே அழுகிறது. மறக்கமுடியாத அற்புதமான நினைவுகளுடன் நாங்கள் புறப்படுகிறோம்'என்று குறிப்பிட்டார்.

அடுத்த ஆசிய விளையாட்டுபோட்டி 2022ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடைபெறவுள்ளது.இதன்மூலம் 3ஆவது முறையாக சீனாவில் ஆசிய விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கு முன், 1990 (பீஜிங்), 2010இல் (குவான்சு) நடத்தப்பட்டது. இதையொட்டி ஆசிய ஒலிம்பிக் கொடி மற்றும் ஆசிய விளையாட்டின் தீபத்துக்குரிய கோல் ஆகிய வை சீனாவிடம் வழங்கப்பட்டது.பின் சீனாசார்பில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

2032 ஒலிம்பிக்

உலகில் அதிகளவு முஸ்லிம்கள் வாழுகின்ற இந்தோனேஷியாவில் இவ்வறானமிகப் பெரிய விளையாட்டுவிழா வொன்று நடைபெற்றது இதுவேமுதல் முறையாகும். எனவே வெற்றிகரமாக ஆசிய விளையாட்டு விழாவை இந்தோனேஷியா நடாத்தியிருப்பதால் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமம் அந்நாட்டு ஜனாதிபதியினால் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தோமஸ் பக்கிடம் விடுக்கப்பட்டது. இதற்குஅவர் வரவேற்பும் தெரிவித்தார்.

கடைசி தங்கம்

ஆசிய விளையாட்டில் இம்முறைகடை சிதங்கப் பதக்கத்தை ஜப்பான் தட்டிச் சென்றது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற'டிரையத்லான்' கலப்பு அணிகளுக்கான இறுதிப் போட்டியில் ஜப்பான் அணி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைவென்றது. தென் கொரியா,ஹொங்கொங் அணிகளுக்கு முறையே வெள்ளி,வெண்கலம் கிடைத்தது.

மதிப்பு மிக்க வீராங்கனை

இம்முறை ஆசிய விளையாட்டின் மதிப்புமிக்க விளையாட்டு நட்சத்திரமாக ஜப்பான் நீச்சல் வீராங்கனை 18 வயதான இகீரிகாகோ தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆசிய விளையாட்டில் அவர் நீச்சலில் 6 தங்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்று அமர்க்களப்படுத்தினார்.

ஆசிய விளையாட்டில் மதிப்புமிக்க வீரர் விருது 1998ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டுவருகிறது. இந்தவிருதைபெறும் முதல் வீராங்கனை இவர் தான். விருதுடன் ரூ.35 இலட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

சீனா ஆதிக்கம்

பதக்கப்பட்டியலில் மொத்தம் 37 நாடுகள் இடம்பிடித்துள்ளன. வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்திய சீனா 132 தங்கம் உட்பட 289 பதக்கங்கள் குவித்து,பதக்கப்பட்டியலில் கம்பீரமாகமுதலிடஅரியணையில் ஏறியது. நீச்சலில் மட்டும் சீனா 19 தங்கம் உட்பட 50 பதக்கங்களை கபளீகரம் செய்தது. பதக்கப்பட்டியலில் 1982ஆம் ஆண்டில் இருந்துஅதாவது 10ஆவது தடவையாகவும் சீனா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்குகுறிப்பிடத்தக்கது.

ஜப்பான் 75 தங்கம், 56 வெள்ளி, 74 வெண்கலம் என்று மொத்தம் 205 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தை தட்டிச்சென்றது. 1994ஆம்ஆண்டுக்கு பிறகுமீண்டும் 2ஆவது இடத்தைப்பிடித்த ஜப்பானுக்கு நீச்சலில் கிடைத்த 19 தங்கம் உட்பட 52 பதக்கங்களே இந்த நிலையை எட்டு வதற்கு பக்கபலமாக இருந்தது.

தென் கொரியா (49 தங்கம்) கைப்பற்றின. போட்டியை நடத்திய இந்தோனேஷியாவுக்கு (31 தங்கம்) 4ஆவது இடமேகிடைத்தது.ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் சுமார் 56 வருடங்களுக்குப் பிறகு இந்தோனேஷியா அதிக தங்கப் பதக்கங்ளை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதற்குமுன்பு அந்தநாடு ஒருபோட்டித் தொடரில் 77 பதக்கங்களுக்கு மேல் பெறவில்லை. ஆனால் இம்முறை ஆசிய விளையாட்டில் புதிதாகசேர்க்கப்பட்ட 9 விளையாட்டுகளில் மட்டும் இந்தோனேஷியா 20 தங்கத்தை வென்றிருப்பது கவனிக்கத்தக்கது.

இலங்கைக்கு ஏமாற்றம்

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 30 விளையாட்டு போட்டிகளுக்காக 176வீர,வீராங்கனைகளும் 78 அதிகாரிகளும் உள்ளடங்கலாக 255 பேர் கலந்து கொண்டிருந்தனர்.ஆசிய விளையாட்டுவிழா வரலாற்றில் இலங்கையிலிருந்து இவ்வளவு அதிகளவான வீரர்களைக் கொண்ட அணியொன்று பங்குபற்றியிருந்தமை இதுவேமுதல்தடவையாகும்.

எது எவ்வாறாயினும்,கடந்த 15 நாட்களில் இலங்கை சார்பாக 176வீர,வீராங்கனைகள் குழுநிலைமற்றும் தனிநபர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த போதிலும் அவர்களால் ஒருபதக்கத்தையேனும் வெல்ல முடியாது போனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட இலங்கைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த 2010, 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவிலும் இலங்கையால் எந்தவொரு பதக்கங்களையும் வெல்ல முடியாது போனமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதில் குழு நிலைபோட்டிகளான ஹொக்கி,கடற் கரை கரப்பட்டந்தாட்டம்,கபடி,உள்ளக கரப்பந்தாட்டம், 3x3 கூடைப்பந்தாட்டம் ஆகியவற்றின் முதல் சுற்று லீக் ஆட்டங்களில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிகளைப் பெற்றபோதிலும்,பதக்கங்களைவெல்லும் அளவிற்கு இலங்கை அணி வீரர்களால் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

அதேபோல இலங்கைக்கு ஓரிரு பதக்கங்களை வென்று கொடுக்கின்ற மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர்கள் தகுதிபெற்றிருந்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியாமல் போனது.

எனினும்,நீச்சல்,மெய்வல்லுனர் மற்றும் ஏழுவர் றக்பி போட்டிகளில் இலங்கை அணி அதி சிறந்தபெபேறுகளைப் பெற்றிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.

(பீ.எப் மொஹமட்)


Add new comment

Or log in with...