இலங்கை கிரிக்கெட் தேர்தல் டிசம்பருக்கு முன்னர் நடத்தப்படும் | தினகரன்

இலங்கை கிரிக்கெட் தேர்தல் டிசம்பருக்கு முன்னர் நடத்தப்படும்

அமைச்சர் பைசர் முஸ்தபா

இலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்து வதற்கான கால எல்லையை அடுத்தவருடம் பெப்ரவரி 9ஆம் திகதி வரை நீடிப்பதற்கு,சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியிருந்த நிலையில், தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரிகளுக்கும்,விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 29ஆம் திகதி து பாயில் அமைந்துள்ள ஐ.சி.சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பில் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வழக்குவிசாரணைகள் முடிவடையும் வரை நிர்வாக செயற்பாடுகளுக்காக நால்வர் கொண்ட குழுவொன்றை நியமிக்கவும்,குறித்த தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் நடாத்தவேண்டும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆலோசனை வழங்கியது.

இந்தநிலையில்,ஐ.சி.சியில் இடம் பெற்ற விசேட சந்திப்பினைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவுக்காக ஜகார்த்தாவுக்கு வருகைத ந்திருந்தார்.

இது இவ்வாறிருக்க,விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் ஆசியவிளையாட்டு விழாவில் பங்கேற்றிருந்த இலங்கையின் விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும் விசேட சந்திப் பொன்று ஜகார்த்தவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரான தர்ஷன எம். பெரேராவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறுதெரிவித்தார். அவர் அங்குமேலும் கருத்து வெளியிடுகையில்,

ஐ.சி.சியுடன் இடம்பெற்ற இரண்டாவது கலந்துரையாடல் மூலம் இறுதிதீர்மான மொன்றுக்கு வரமுடிந்தது. முதலில் இலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை அடுத்தவருடம் பெப்ரவரி 9ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஐ.சி.சிஅனுமதிவழங்கியது. இதனையடுத்து இன்று நான் இலங்கை கிரிக்கெட் தேர்தல் முறைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன். தற்போதுள்ள சட்ட விதிமுறைகளுக்கு சங்கங்களில் உள்ள அங்கத்துவர்களைக் கொண்டுதான் தேர்தல் குழு நியமிக்கப்படுகின்றது. எனவே, இந்தமுறையைமாற்றி கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தல் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவரையும்,தேர்தல் தொடர்பில் அனுபவம் கொண்ட ஓய்வு பெற்றஅதிகாரிகள் இருவர் உள்ளிட்ட ஐந்துபேர் இடம்பெறவேண்டும் என ஐ.சி.சிஆலோசனை வழங்கியது.

இதன்படி,கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடையஎந்தவொருநபரையும் இந்தக் குழுவில் நியமிக்கமாட்டேன். அவ்வாறுசெய்தால் நானும் கிரிக்கெட் பிரிவினைவாதத்துக்குஆளாகிவிடுவேன். கிரிக்கெட்டை நிர்வாகம் செய்ய கிரிக்கெட் விளையாடியவர்களோ அல்லது கிரிக்கெட் பற்றிய அ றிவுள்ளவர்களோ இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. அதற்காகத் தான் தெரிவுக் குழுவினர்,நிறைவேற்று அதிகாரி உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர் என தெரிவித்தார்.

இடைக்கால நிர்வாகசபையொன்றை நியமிப்பதற்கான எண்ணம் இருக்கின்றதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியகேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

ஒருபோதும் கிடையாது. தற்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்துசெயற்பாடுகளும் எனது செயலாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத்தவிர,அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மேலும் நால்வரை நியமிக்குமாறு ஐ.சி.சிஉத்தர விட்டது. இதற்காக இலங்கையின் நிர்வாகத் துறையில் அனுபவமிக்க தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த நான்கு பேரை நியமிக்கஎதிர்பார்த்துள்ளேன். இந்தக் குழுவில் எனதுசெயலாளர் தலைவராக செயற்படும் அதேவேளை, ஏனைய நால்வரும் நிர்வாகசெயற்பாடுகளில் அவருக்கு உதவிசெய்வார்கள். எனவே இந்தகுழுவை ஒருபோதும் இடைக்கால நிர்வாகசபையாக கருதவேண்டாம். அதேபோல இந்தநால்வருக்கும் ஒருபோதும் செயலாளரை மீறிதனிப்பட்டமுறையில் எந்தவொரு பக்கச்சார்பான தீர்மானங்களையும் மேற்கொள்ளமுடியாது.

அத்துடன்,பெப்ரவரி 9ஆம் திகதிக்குமுன் தேர்தலை நடத்துவதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி,எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தேர்தலை நடத்து வது தொடர்பிலான ஒழுங்கு விதி முறைகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெரும்பாலும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்த முடியும் எனதெரிவித்தார்.

(பீ.எப் மொஹமட்)


Add new comment

Or log in with...