விமானத்தில் பெண் பயணியுடன் தமிழிசை வாக்குவாதம் | தினகரன்


விமானத்தில் பெண் பயணியுடன் தமிழிசை வாக்குவாதம்

தூத்துக்குடி விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை இளம் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது.

அந்தப் பெண் ஏதோ கூறியதால், கோபமடைந்த தமிழிசை செளந்தரராஜன் அந்தப் பெண்ணுடன் சண்டைக்குப் போய் விட்டார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சௌந்தராஜன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு பயணமானார்.

அப்போது விமானத்தில் தமிழிசையை கண்டதும் சோபியா என்ற இளம் பெண் ஒருவர், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று பாஜகவுக்கு எதிராக திடீரென கண்டன முழக்கங்களை எழுப்பத் தொடங்கினார்.

விமானத்துக்குள்ளேயே தனியாளாக இப்படி பாஜகவுக்கு எதிரான முழக்கமிட்டதை பார்த்து தமிழிசை உட்பட மற்ற பயணிகள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாஜகவை விமர்சித்து கோஷமிட்ட அந்தப் பெண்ணிடம் தமிழிசை விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய காவல்நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதல் காரணமாகவே இளம் பெண் தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...