ஸ்டாலினை சந்திக்க போவதில்லை அழகிரி திட்டவட்டமாக தெரிவிப்பு | தினகரன்


ஸ்டாலினை சந்திக்க போவதில்லை அழகிரி திட்டவட்டமாக தெரிவிப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் - அழகிரி இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஸ்டாலின் தன்னை மீண்டும் கட்சியில் சேர்ப்பார் என அழகிரி எதிர்பார்த்தார்.

ஆனால் ஸ்டாலின் அதனை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. இந்நிலையில் கட்சியை காப்பாற்ற வேண்டும் என அழகிரி பேசி வந்தார்.

இந்நிலையில் திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என அழகிரி தெரிவித்தார்.

இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றியது.

இந்நிலையில் தனது பலத்தை நிரூபிக்க அழகிரி எதிர்வரும் 5ஆம் திகதி கருணாநிதி நினைவஞ்சலி பேரணி நடத்த உள்ளார். சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை இந்த பேரணி நடைபெறவுள்ளது

இதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி நேற்று சென்னை வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் 5ஆம் திகதி சுமார் ஒரு இலட்சம் பேரைத் திரட்டி அமைதிப் பேரணி நடத்துவோம். அப்பொழுது எங்களது பலத்தை நிரூபிப்போம் என்றும் அழகிரி கூறினார்.


Add new comment

Or log in with...