"உங்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா.." | தினகரன்

"உங்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா.."

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக நடித்ததாக ப்ரியா வாரியர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு திரைப்பட பாடல் உலகம் முழுக்க வைரலானது. ப்ரியா வாரியர் நடித்து இருக்கும் இந்தப் பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது.

கேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவை வைத்து பல வீடியோக்களும் வெளிவந்தன.

இந்தப் பாடல் இஸ்லாமியர்களின் உணர்வுகளை பாதிக்கிறது என்று ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து ப்ரியா வாரியரும் படத்தின் இயக்குனர் ஒமார் லுலுவும் நீதிமன்ற படியேறினர்.

இந்தப் பாடலில் தவறான வரிகள் எதுவும் இல்லை. இது கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் பாடக்கூடிய பாடல்தான் என்று விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து ப்ரியா வாரியர், படத்தின் இயக்குனர், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பாடலில் தவறு ஏதும் இல்லை என்றுள்ளனர்.

மேலும் யாரோ ஏதோ பாடல் எழுதுகிறார்கள். அதில் யாரோ நடிக்கிறார்கள். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? ஏன் இப்படி எல்லாவற்றுக்கும் பொலிஸில் புகார் அளிக்கிறீர்கள் என்று கண்டிப்பு காட்டியுள்ளனர்.

உங்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என்று கண்டிப்பாக கேட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...