ஞானசாரரின் மேன்முறையீடு செய்யும் கோரிக்கை நிராகரிப்பு | தினகரன்


ஞானசாரரின் மேன்முறையீடு செய்யும் கோரிக்கை நிராகரிப்பு

ஞானசாரரின் மேன்முறையீடு செய்யும் கோரிக்கை நிராகரிப்பு-Gnanasara's Request Rejected by Court of Appeal

 

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை தொடர்பில், மேன்முறையீடு செய்வது தொடர்பான கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பிரீத்தி பத்மன் சுரசேன உள்ளிட்ட நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் குறித்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்றம் இத்தீர்ப்பை அறிவித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் அறிவிப்பை அடுத்து, ஞானசார தேரரின் கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் மேன்முறையீடொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொது பல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அவர் சிறுநீரகம் தொடர்பான சத்திரசிகிச்சை ஒன்றிற்காக, ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிறைச்சாலை பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த அவர், குறித்த சத்திரசிகிச்சையை அடுத்து, நேற்றைய தினம் (30) சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...