இந்திய விஜயத்தில் ​ எந்த பிரச்சினையும் எழப்போவதில்லை | தினகரன்


இந்திய விஜயத்தில் ​ எந்த பிரச்சினையும் எழப்போவதில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

லங்கா சுதந்திரக் கட்சியில் ஆரம்பம் முதலே இணைந்து பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். அதேவேளை லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்து வந்தவர்.

1986 ஆம் ஆண்டு சென்னை சூழைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் 10 பாராளுமன்ற  உறுப்பினர்களைக் கொண்ட குழு எதிர்வரும் 9ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது. இந்தக் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றுள்ளார். சூழைமேட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்தியாவுக்கு செல்வது குறித்தே இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

அரசியல் உள்நோக்கத்துடனேயே தன்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீதிமன்றுக்கு யாராவது சமுகமளிக்கவில்லை என்றால் அந்த நீதிமன்றத்தால் அவரை கண்டுபிடிக்குமாறு அல்லது அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படி பொலிசாருக்கு ஆணையிடுவது வழமை.

சூழைமேட்டு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லாதுவிட்டாலும் ஈ.பி.ஆர்.எல்.எவ். என்ற அமைப்பில் இருந்த காரணத்தால் அதற்கான தார்மீக பொறுப்பை எடுத்திருந்தேன். இந்த வழக்கில் தொடர்புபட்டிருந்த நான் 1990 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்று இலங்கை வந்திருந்தேன்.

இலங்கையில் நான் இருந்தமையால் நீதிமன்றுக்குச் சமுகமளிக்கவில்லை என்ற காரணத்தால் நீதிமன்று எனக்கு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் நான் அதற்கு சரியான காரணத்தை கொடுத்திருந்தமையால் அந்த அழைப்பாணை எப்போதோ நீக்கப்பட்டுவிட்டது.

அதனால் குறித்த வழக்கு தொடர்பாக எனக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. தற்போதும் அந்த வழக்கு விசாரணை இருக்கின்றது. இதற்கு நான் வீடியோ காணொளியூடாக முன்னிலையாகி வருகின்றேன். அதுமட்டுமல்ல அந்த வழக்கு மிகவிரைவில் நிறைவுக்கு வந்துவிடும் என்றும் நம்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான நிமால் சிறிபால டி.சில்வா, ராவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியல்ல, றிசாட் பதீயுதீன், மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, தினேஸ்குணவர்த்தன, விஜிதஹேரத் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...