தமிழர் பிரச்சினைகளுக்கு புதிய யாப்பு தீர்வல்ல | தினகரன்

தமிழர் பிரச்சினைகளுக்கு புதிய யாப்பு தீர்வல்ல

அரசியலமைப்பு அடிப்படையாக அமையும் என்பதே எதிர்பார்ப்பு

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப்போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சினையையும் ஆராய முடியாது என காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சிங்கள மொழியில் உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமானது. சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஒத்துக்கொள்வதுடன் ஏனைய மக்களுக்காக மறுசீரமைப்பு மற்றும் நீதிக்காக முன்வரவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக தெற்கில் நடைபெற்ற தொடர்ச்சியான கூட்டங்களில் இது 7வது கூட்டமாகும்.

 

 


Add new comment

Or log in with...