ரூ. 15 கோடி; 20 கிலோ தங்கத்துடன் இந்தியர் கைது | தினகரன்

ரூ. 15 கோடி; 20 கிலோ தங்கத்துடன் இந்தியர் கைது

ரூ. 15 கோடி; 20 கிலோ தங்கத்துடன் இந்தியர் கைது-Indian Arrested at BIA-20kg Gold Seized

 

ரூபா 15 கோடிக்கும் அதிகமான தங்கக் கட்டிகளுடன் இந்தியர் ஒருவரை, பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID) கைது செய்துள்ளனர்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று (31) காலை 6.30 மணியளவில், துபாயிலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையம் வந்த இந்தியர் ஒருவர், 20 கிலோ தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், இந்தியாவைச் சேர்ந்த 47 வயதான போசாலே தர்மராஜ் கங்காதர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், தலா ஒரு கிலோவைக் கொண்ட 20 தங்கக் கட்டிகளை தனது உடலின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மறைத்து வைத்து, விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்லும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக விமானநிலைய சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 


Add new comment

Or log in with...