மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம் | தினகரன்

மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்

மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்-Launch of Helicopter Ride at Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் ஹெலிகொப்டர் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்-Launch of Helicopter Ride at Batticaloa

மட்டக்களப்பு விமான நிலையத்துடன் இணைந்து மட்டக்களப்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களின் கடற்கரை அழகுகள், இயற்கை காடுகள் ஏரிகள் போன்றவற்றை வானிலிருந்து பார்க்கும் உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா சேவை இன்று (24) வெள்ளிக்கிழமை காலை சுமார் மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்-Launch of Helicopter Ride at Batticaloa

இலங்கை சுற்றுலா மற்றும் கைதொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உலங்குவானூர்தி (ஹெலிகாப்டர்) சுற்றுலா சேவை அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு விமான நிலையத்தின் முகாமையாளர் சிந்தக பொன்சேகா, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம். செல்வராஜா, மட்டு. மாநகர சபை உறுப்பினர் திருமதி பல்தசார் ஆகியோர் கலந்து கொண்டு முதலாவது ஹெலிகொப்டர் சுற்றுலா சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்-Launch of Helicopter Ride at Batticaloa

குறித்த உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலாவில் மட்டக்களப்பு நகரம் உட்பட மட்டக்களப்பு நகரத்தின் கிராமங்கள், காத்தான்குடி நகரம்,  ஏறாவூர் நகரம் என்பவற்றின் கடற்கரை அழகுகள், இயற்கை காடுகள் ஏரிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டதுடன், இதற்கான உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா பயணச் சீட்டு  கட்டணமாக ஒருவருக்கு  ரூபா 12,000 (பன்னிரெண்டாயிரம்) அறவிடப்படுவதுடன், 2 வயது பிள்ளைகள் மாத்திரம் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்-Launch of Helicopter Ride at Batticaloa

மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்-Launch of Helicopter Ride at Batticaloa

மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்-Launch of Helicopter Ride at Batticaloa

மட்டு நகரில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்-Launch of Helicopter Ride at Batticaloa

(காத்தான்குடி விசேட நிருபர் - பழுலுல்லாஹ் பர்ஹான்)

Add new comment

Or log in with...