31 வயது தந்தை, 11 வயது மகளின் சடலங்கள் மீட்பு | தினகரன்

31 வயது தந்தை, 11 வயது மகளின் சடலங்கள் மீட்பு

 

தற்கொலை என சந்தேகம்

தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் தந்தை மற்றும் அவரது மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (30) இரவு 9.45 மணியளவில், பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மஹியங்கணை, தம்பகொல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் குறித்த இருவரினதும் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தம்பகொல்ல, மெதம்பஓயா, பேரகனத்தவைச் சேர்ந்த, சஞ்ஜீவ ரொட்ரிகோ (31) எனும் இள வயது தந்தையும், 11 வயதான, அவரது மகள், கயானி உதேஷிகா எனும் சிறுமியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குடும்ப பிரச்சினை காரணமாக, விசம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பொருட்டு அவை, மஹியங்கணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை, மஹியங்கணை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...