மலையக கிராமத்திட்டங்களுக்கு வித்திட்டவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் | தினகரன்

மலையக கிராமத்திட்டங்களுக்கு வித்திட்டவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான்

மலையக பிரதேசங்களில் இன்று கிராமத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு வித்திட்டவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் என்பதை மறந்துவிட முடியாது.

1972 ஆம் ஆண்டு தோட்டங்கள் 50 ஏக்கர்களாக பிரிக்கப்பட்டது. இதன் போது கண்டி பிரதேசத்தில் புஸ்ஸலாவை பகுதியில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது என சிறு கைத்தொழில் பிரதி அமைச்சரும், இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வி மற்றும் மாற்று தொழில்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. கடந்த கூட்டு ஒப்பந்தத்தின் போது தோட்ட தொழிலாளர்களின் தொகை ஒரு இலட்சத்து எண்பதாயிரம் என தெரிவித்த கம்பனிகள் இப்போது தொழிலாளர்களின் தொகை வெறும் 90 ஆயிரம் என தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் மலையக தோட்டப் பகுதிகள் மாற்றமடைந்து தனக்கு தானே வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ளும் வகையில் மாற்றம் பெற்றுள்ளன.

இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 105வது ஜனன தினத்தையொட்டி கொட்டகலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

1972 ஆம் ஆண்டு தோட்டங்கள் 50 ஏக்கர்களாக பிரிக்கப்பட்டது. இதன் போது கண்டி பிரதேசத்தில் புஸ்ஸலாவை பகுதியில் கிராம திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில்

ஹற்றன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...