இந்திய, அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத்துறை இடையே பேச்சு | தினகரன்

இந்திய, அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத்துறை இடையே பேச்சு

செப்டம்பர் 6இல் டெல்லியில் சந்திப்பு

 இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சுக்களுக்கு இடையே செப்டம்பர் 6-ஆம் திகதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை செப்டம்பர் 6-ஆம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் இருநாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும் இவ்விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2008-ல் இரு நாடுகளுக்கு இடையில் எந்தவொரு ஒப்பந்தங்களும் ஏற்படாத நிலையில், தற்போது 2018-ஆம் ஆண்டில் 18 பில்லியன் அளவிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை மேலும் அதிகரிக்க விரும்புவதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா, அமெரிக்கா இடையே 2017-ஆம் ஆண்டில் 12 பில்லியன் அளவில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந் நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் 126 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கினால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...