கேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி | தினகரன்

கேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலி

கேரளாவில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் அங்கு தற்போது தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எலிக்காய்சலுக்கு ஒருவர் பலியாகியுள்ளதை அம்மாநில சுகாதாரத்துறை உறுதிபடுத்தியுள்ளது.

கேரளாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழையினால் அம்மாநிலம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பல ஆயிரம் கிலோமீட்டர் வீதிகள் சேதமடைந்திருக்கின்றன. 200-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்துள்ளன. இதுதவிர கன மழைக்கு அம்மாநிலத்தில் 476 பேர் பலியாகியுள்ளனர்.


Add new comment

Or log in with...