கோத்தா, பீ.பி., லலித் விமான சேவை மோசடி தொடர்பில் வாக்குமூலம் | தினகரன்

கோத்தா, பீ.பி., லலித் விமான சேவை மோசடி தொடர்பில் வாக்குமூலம்

கோத்தா, பீ.பி., லலித் விமான சேவை மோசடி தொடர்பில் வாக்குமூலம்-Gotabaya-Rajapaksa-PB-Jayasundera-Lalith-Weeratunga-Srilankan-Airline-Mihin-Lanka-airlines

 

ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ வாக்குமூலம் வழங்க முன்னிலையாகினார்.

அவருடன், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பேராசிரியர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆணைக்குழுவினால் அவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை அடுத்து, அவர்கள் இன்று (29) முற்பகல் அங்கு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்ரசேன ஆகியோர், குறித்த ஆணைக்கழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விசாரணைகள் தொடர்பில், மிஹின் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், வெளி விவகார அமைச்சின் முன்னாள் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவை, ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...