இ.தொ.கா பொதுச் செயலராக அனுசியா; ஆறுமுகனின் மகனுக்கும் முக்கிய பொறுப்பு | தினகரன்

இ.தொ.கா பொதுச் செயலராக அனுசியா; ஆறுமுகனின் மகனுக்கும் முக்கிய பொறுப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் இனித் தலைவராக மட்டுமே செயற்படவுள்ளார்.

நேற்று (30) நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பிலுள்ள இ.தொ.கா தலைமையகத்தில் நடைபெற்றது.

புதிய பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான் தலைவராக மட்டும் செயற்படவுள்ளார்.

ஹற்றன் சுழற்சி நிருபர் 

 


Add new comment

Or log in with...