மைத்திரியின் ஜனநாயக அர்ப்பணிப்புக்கு மோடி பாராட்டு | தினகரன்

மைத்திரியின் ஜனநாயக அர்ப்பணிப்புக்கு மோடி பாராட்டு

இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்து நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக தான் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பை தான் பாராட்டுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இடம்பெற்று வரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளம்சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்திய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதியுடன் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய பிரதமர், எதிர்வரும் செப்டம்பர் 03ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் பிறந்த தினத்திற்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அத்துடன் நான்காவது பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில் அதன் தலைமைத்துவம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளமை தொடர்பில கருத்துத் தெரிவித்த இந்திய பிரதமர்,

பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்படும் எந்தவொரு பணியையும் உரியவாறு நிறைவேற்ற தான் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...