2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்: கமல் கருத்து | தினகரன்


2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்: கமல் கருத்து

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடைபெறவுள்ளது. இதுகுறித்து கமல், நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் நாங்கள் அதைச் சந்திக்கத் தயார்’ என்று கூறியுள்ளார். அதே சமயம் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பங்கேற்கமாட்டோம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு இந்தத் தேர்தலின் மூலம் பாடம் புகட்டுவோம். ஆனால் நேரடியாக தேர்தலைச் சந்திக்கப் போவதில்லை என இதுகுறித்து கூறினார். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் திகதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...