கட்சியில் இணைத்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மு.க. அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு இலட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் 7ஆவது நாளாக நேற்றும் மதுரையில் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்றத் தயார். கட்சியில் சேர்த்துககொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். பொதுக்குழு மட்டுமே திமுக அல்ல, பொதுக்குழுவில் 1,500 பேர் மட்டுமே உள்ளனர். கட்சியைக் காப்பாற்றவே திமுகவில் இணைய விரும்புகிறேன்.
துரை தயாநிதிக்கு கட்சியில் எந்தப் பதவியும் கேட்கவில்லை. தனக்கும் தயாநிதிக்கும் அந்த ஆசையில்லை. செப்டம்பர் 5ஆம் திகதி நடக்கும் அமைதி பேரணியில் ஒரு இலட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள். பேரணி நடத்துவதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எங்களுக்கு நெருக்கடி ஏதுமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Add new comment