இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தகவல் | தினகரன்

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தகவல்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால் திமுக பொதுக்குழுவில் சமூகநீதிக்கு எதிராகச் செயல்படும் மோடி அரசை எதிர்ப்போம் என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதனால் திமுக- பாஜக கூட்டணி குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும். அண்ணா பிறந்தநாளை யொட்டி எதிர்வரும் செப்.15-ம் திகதி ஈரோட்டில் மதிமுக மாநாடு நடைபெறுகிறது என்றார்.


Add new comment

Or log in with...