இ.போ.ச. பஸ் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; சிறுவன் பலி | தினகரன்


இ.போ.ச. பஸ் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; சிறுவன் பலி

இ.போ.ச. பஸ் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; சிறுவன் பலி-Badulla Alogolla CTB Bus Accident 14 Yr Old Dead

 

பதுளை - அலுகொல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று (27) காலை, அலுகொல்லவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இ.போ.ச. பஸ் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; சிறுவன் பலி-Badulla Alogolla CTB Bus Accident 14 Yr Old Dead

குறித்த விபத்தில் கந்தேகெதர, வீரகமவைச் சேர்ந்த மொஹமட் றிழ்வான் மொஹமட் ஆகில் எனும் சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 34 பேர் காயங்களுக்குள்ளாகியதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான குறித்த பஸ், சாரதியின் கவனமற்ற செலுத்துகை காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

12 பெண்கள் மற்றும் 16 ஆண்கள் உள்ளிட்ட, பஸ் வண்டியில் பயணித்த 28 பேர், தற்போது வரை பதுளை வைத்தியசாலையில் தங்கி, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பதுளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(படங்கள்: நிஷாந்த குமார)

 


Add new comment

Or log in with...