அமைதியின்மை மின்னேரியா பூங்காவுக்கு பூட்டு | தினகரன்

அமைதியின்மை மின்னேரியா பூங்காவுக்கு பூட்டு

அமைதியின்மை மின்னேரியா பூங்காவுக்கு பூட்டு-Minneriya National Park Temporarily Closed

 

மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நேற்று (26) இரவு மின்னேரிய குளத்தில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அப்பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத சிலரால் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிவிட்டு, அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடித்ததாக தெரிவிக்கப்படும் குறித்த சந்தேகநபரை அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...