Thursday, March 28, 2024
Home » உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வேகமாக நகருவதால் அச்சுறுத்தல்

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வேகமாக நகருவதால் அச்சுறுத்தல்

by Rizwan Segu Mohideen
November 27, 2023 3:18 pm 0 comment

நியூயோர்க் மாநகரை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய பனிப்பாறையால் தெற்கு ஜோர்ஜியா தீவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

1986ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறையான ஏ23- ஏ 30 ஆண்டுகளின் பின் முதல் முறை நகர ஆரம்பித்துள்ளது.

சுமார் ஒரு டிரில்லியன் மெட்ரிக் தொன் எடையுள்ள இந்த பாறையானது, பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களின் உதவியால், அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையை கடந்து வேகமாக நகர்ந்து வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களும் பனிப்பாறை நகர்வதை உறுதி செய்துள்ளது.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே, பனிப்பாறை நிபுணர் ஒலிவர் மார்ஷ் கூறும் போது, “உலகின் மிகப்பெரிய அளவில் உள்ள இந்த பனிப்பாறையை நகர்த்தும்போது, அதனை பார்ப்பது அரிது. எனவே விஞ்ஞானிகள் அதன் பாதையை உன்னிப்பாகக் கவனித்தது வருகிறார்கள்” என்றார்.

இந்த இராட்சத பாறை சற்று ஆவியாகி உள்ளதால், எடை குறைந்து காற்று மற்றும் கடல் நீரோட்டம் குறைந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி நகர்கிறது. இது தெற்கு ஜோர்ஜியா தீவினை நோக்கி நகர்ந்து வருகிறது.

அந்த தீவினை இந்தப் பனிப்பாறை சென்றால், அண்டார்டிகாவின் வனவிலங்குகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பல்லாயிரம் உயிரினங்கள், பென்குயின்கள் மற்றும் கடற்பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT