அரசின் இலக்குகளை ஒரு முறையேனும் மீளாய்வோம்! | தினகரன்

அரசின் இலக்குகளை ஒரு முறையேனும் மீளாய்வோம்!

 

வர்த்தகத் துறையில் நாட்டு மக்களை ஊக்குவித்து, தொழில் முனைவின் சொர்க்கபுரியாக நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கூடிய v2025 என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சியி ஆரம்ப கட்டம் இன்று 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மொனராகலையில் நடைபெறுகின்றது.

ல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தின் மீது கட்டியெழுப்பப்படும் நிலையான அபிவிருத்தியை நாட்டுக்கு காட்சிப்படுத்துவதும் இலங்கைத் திருநாட்டை தொழில் முனைவின் சொர்க்கபுரியாக மாற்றம் காணச் செய்வதற்கும், புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதுமே இந்த பாரிய கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.

2015ல் வளமான நாடாக எமது தேசத்தை மாற்றியமைப்பதற்கான கருத்திட்டத்தை முன்வைத்து, இலக்கு நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ள இவ்வேளையில், அரசின் இலக்குகள் குறித்து ஒருதடவையேனும் மீளாய்வு செய்வது பயன்மிக்கதாகும்.

2015ம் ஆண்டின் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இந்நாட்டு மக்கள் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தே தமது சர்வஜன வாக்குரிமை பலத்தை பாவித்தனர். பரிசுத்தமான மற்றும் சரியான அரசியலுக்கும், கடும்போக்கு வாதத்துக்கும் எதிராக நல்லாட்சிக்கும் ஆதரவாக அவர்கள் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

மனித உரிமைகளை பாதுகாக்கின்ற, ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து பன்முகவாதத்தினை ஆதரிக்கின்ற, சமமான நன்மைகள் அனைவருக்கும் உரித்தாகின்ற ஜனநாயக வளமிக்கதொரு நாடே அவர்களின் பிரார்த்தனைகளாகும். அவ்வளமான பொருளாதாரம் மாத்திரம் இந்நாட்டில் மட்டுப்படுத்தப்படவில்லை. அறிவினாலும், சமூக பெறுமதியினாலும், நற்குணங்களினாலும், எண்ணங்கள் மற்றும் தகைமைகளினாலும், பசுமையான சூழலினாலும் இந்நாடு வளம் பெற வேண்டும்.

அக்கனவினை நனவாக்கும் பயணத்தில் பாரிய நடவடிக்கைகள் சிலவற்றை கடந்த இரு ஆண்டுகளினுள் இந்நல்லாட்சி அரசாங்கம் முன்வைத்தது. சர்வதேசத்தினுள் இலங்கையின் ஸ்தீரமான நிலையினை கட்டியெழுப்புதல், 19வது திருத்தம், ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல், தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்தல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், புதிய அரசியல் யாப்புக்கு வழிசமைத்தல், நல்லிணக்க பயணத்தை நோக்கி பிரவேசித்தல் என்பவை அவற்றுக்கு உதாரணங்களாகும்.

அதேபோன்று கடன் சுமைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு இடையில் பொதுமக்களின் கைகளை பலப்படுத்துவதும், இவ்வரசாங்கத்தின் முன்னால் காணப்பட்ட சவாலாகும். நாட்டை கடன் பொறியிலிருந்து மீட்டெடுப்பதற்கு இன்னும் பத்து வருடங்களாவது செல்லும். எனினும், அரச சேவையில் மற்றும் தனியார் துறையில் வேதனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோலியம், எரிவாயு, ஔதடங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. கிராமங்கள் தோறும் கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டன. சலுகை வட்டி வீதத்துக்கு அபிவிருத்தி கடன் கொடுக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களை காப்புறுதி செய்யப்பட்டது. இயற்கை அனர்த்தங்களில் துரித நிவாரணங்கள் வழங்கப்பட்டது. இவை மேற்கொள்ளப்பட்ட வேளைகளில் ஒரு சிலவாகும்.

இவ்வனைத்து முயற்சிகளும் 2025ம் ஆண்டில் வளமான நாட்டை உருவாக்குவதற்காகும். சமூக நிலையும் சந்தையின் போட்டித்தன்மையும் உயர்வடைந்து அனைவரும் நன்மை பெறக்கூடிய அறிவினை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிக்க சமூக சந்தை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகும். அனைத்து பிரஜைகளுக்கும் நல்ல வருமானத்தை மற்றும் நல்ல வாழ்க்கை மட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் மூலம் கருதப்படுகின்றது. அவ்வாறு இலங்கையை மாற்ற வேண்டும் எனின் இலங்கை இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக மாற வேண்டும். அச்சந்தர்ப்பத்திலேயே தேசிய சந்தையானது பலமடைந்து அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் சிறந்த பொருளாதாரம் உருப்பெறும்.

இன்றைய சூழ்நிலையில் தடைகள் ஏராளம் காணப்படுகின்றன. அரச நிதி முகாமைத்துவத்திலும், அடிப்படை வசதிகளிலும் பிரச்சினைகள் ஏராளம் காணப்படுகின்றன. அவை தொடர்பான சட்டங்கள் காலவதியானவை. அவை பலமற்றது. நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. அதனால், இவ்வனைத்து துறைகளையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அனைத்து துறைகளிலும் மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டும்.

மூன்று வருட பொருளாதார செயற்திட்டம்

2025 இலக்கு ஊடாக எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கான அபிவிருத்திக்கான நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்காக பரந்துபட்ட பொருளாதார உத்திகளை செயற்படுத்த வேண்டியுள்ளது. பல்வேறு இலக்குகளை அடைய வேண்டியுள்ளது. நாம் தனிநபர் வருடாந்த வருமானத்தை 5,000 அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகள் அதன் மூலம் கிடைக்கின்றது. போட்டித்தன்மையை ஊக்குவித்து, வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து இலங்கையர்களுக்கும் செழிப்புடனான சமவாய்ப்பை ஏற்படுத்தி ஊழலை முறியடிப்போம்.

இவ்வேலைத் திட்டத்துக்கு புதிய நோக்கமும் புதிய பிரவேசமும் அவசியம்.

புலமையை அடிப்படையாகக் கொண்ட, உயர் போட்டித்தன்மை வாய்ந்த சமூக சந்தைவாய்ப்பைக் கொண்ட தேசமொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலம் நீதியான சமூகமொன்றை உருவாக்க முடியும்.

கடன் சுமை, வரவு செலவு திட்ட வித்தியாசம் மற்றும் பொறுப்பற்ற நிதிக் கொள்கை போன்றவை எமது பொருளாதார விருத்திக்கு தடையாகக் காணப்படுகின்றன. எமது வரி கொள்கையானது சமூகத்துக்கு உகந்தாற்போல் மாற வேண்டும். வரிவிதிப்புக்களை நியாயமானதாகவும், சிறப்பான சரிமுகாமைத்துவம் கொண்டமாகவும் மேம்படுத்துவோம். அரசாங்கமும் தனியார் துறையினரும் ஒன்றாக இணைந்து பணிபுரிய வேண்டும். அடிப்படை பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டும்.

 

விருத்தியின் வாய்ப்புக்களை விரிவுபடுத்த வேண்டும்

நாட்டுக்கு வருகின்ற வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும். அதனால் அவ்வாறான கொள்கைகளை மாற்ற வேண்டும். ஏற்றுமதி தொடர்பில் அதிகமான கவனம் செலுத்தப்படுகின்ற முதலீடுகளை இந்நாட்டுக்கு வரவழைப்பதற்கும், சந்தைகளில் அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கும், சுங்க செயன்முறையினை வேகமாகவும் பரிசுத்தமாகவும் முன்னெடுப்பதற்கு அவசியமான புதிய சந்தை கொள்கையினை அறிமுகம் செய்ய வேண்டும்.

பெறுமதி சேர்க்கின்ற போட்டித்தன்மைமிக்க விவசாய துறைக்கு முதலிடம்

எமது அன்றாட வாழ்வுடன் மிகவும் நெருக்கமான தொடர்புள்ள விவசாய தொழில்துறையில் பலனை அதிகரித்து சர்வதேச தரத்திலான விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதற்கு நாம் விவசாயிகளை ஊக்கப்படுத்துகின்றோம். இதன் மூலம் மிகவும் பெறுமதிமிக்க விவசாய உற்பத்தி பண்டங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. அதனால் அந்நிய செலாவணியினை அதிகளவில் ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. எம்மத்தியில் காணப்படுகின்ற பாரம்பரிய விவசாய உரிமைகளுக்கு அப்போதுதான் உயிர் கிடைக்கும்.

காணி, உழைப்பு மற்றும் முதலீட்டு சந்தைய மறுசீரமைத்தல்

இம்மூன்று காரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தாது விடுமிடத்து நாங்கள் எதிர்பார்க்கின்ற இலக்குகளை நோக்கி செல்ல முடியாது. காலம் கழிந்த காணிக்கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். நேர்முகமான சிந்தனை கொண்ட முயற்சியாளர்களை உருவாக்கி, தொழிலாளர்கள், தொழில் வழங்குநர்களுக்கு இடையிலான தொடர்பினை பலப்படுத்தி, உற்பத்தி தொகையினை அதிகரிக்க வேண்டும். தனியார் துறையினரை அபிவிருத்தியில் பங்காளர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனின், நிதிச்சந்தையினை மேலும் விரிவு படுத்தவேண்டும்.

கல்வி, சுகாதாரம், சூழல் ஆகிய முறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாம் குறிப்பிடுகின்ற இவ்வளமான நாட்டை அமைக்க கல்வி, சுகாதாரம், சூழல் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை மற்றும் அதற்கு சமமாக விருத்தி செய்ய வேண்டும். அனைத்து பிரஜைகளுக்கு வீடொன்று, குடிப்பதற்கு பரிசுத்தமான குடிநீர், போஷாக்கான உணவு வேளையொன்று, முறையான போக்குவரத்து வசதிகளை போன்று சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றும் கிடைக்க வேண்டும். எமது வரலாற்று, கலாசார பாரம்பரியங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தல் இன்றி இப்பயணத்தில் ஈடுபட முடியாது

நாளுக்கு நாள் தொழில் நுட்பம் மாறுபடுகின்றது. பொருளாதார அபிவிருத்தியை இந்த யதார்த்தத்தில் இருந்து வேறுபடுத்த முடியாது. அதனால் டிஜிட்டல் மயப்படுத்தலின் ஊடாக பலமான பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். எமது அபிவிருத்தி உபாய முறைகள் அம்மாற்றங்களுக்கு இசைந்து கொடுக்க வேண்டும்.

ஓய்வூதியம், சமுர்த்தி என்பவற்றை முறைப்படுத்தி சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வூதியமானது தற்போது அரச சேவையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. சரியென்றால், உழைப்பாளிகள் அனைவருக்கும் ஓய்வூதியத்தின் நன்மை கிடைக்க வேண்டும். சமுர்த்தி கிடைப்பதிலும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறைந்த வருமானம் கிடைக்கும் எவருக்கும் ஒன்றும் கிடைப்பதில்லை. இம்முறையினை மாற்ற வேண்டும். வளமான நாட்டை உருவாக்க அனைவருக்கும் இலாபம் கிடைக்கின்ற பலமான, சாதாரண சமூக பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று இருந்தால் அவ்விலக்கை அடைந்து கொள்ள வேண்டும்.

நிலைபேறான அபிவிருத்தி இப்பயணத்தின் அடிப்படையாகும்.

நிலைபேறான அபிவிருத்தி கொள்கைக்கு உட்படாது பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் மாத்திரம் கவனத்திற் கொண்டால் எதிர்கால சமுதாயத்திற்கு நாடொன்று கைவசம் இருக்காது. சூழலை பெற்றோர்களை போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயத்தை கட்டாயமாக விருத்தி செய்து இந்நாட்டில் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் சமமான முறையில் நன்மைகள் பகிர்ந்து செல்ல வேண்டும். மின்சக்தி மற்றும் எரிசக்தி ஆகியவற்றை அதிக செலவில் இருந்து குறைக்க வேண்டும். சூழலுக்கு பாதிப்பு செலுத்தாத விதத்தில் மின்சக்தியினை உற்பத்தி செய்யும் முறையினை உருவாக்க வேண்டும். கடந்த காலங்களில் அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறுவதை நாம் கண்டு வருகின்றோம். அவற்றை கட்டுப்படுத்துவதற்கும், ஏற்படுகின்ற அனர்த்தங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வதற்கும் பொருத்தமான முறையொன்று எம்மிடத்தில் இருக்க வேண்டும்.

வளமான நாட்டை உருவாக்க வேண்டும் எனின் இக்காரணி அத்தியாவசியமானது. அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் நிறுவனங்களையும் மறுசீரமைக்கும் விரிவான வேலைத் திட்டமொன்றை நாம் ஆரம்பித்திருப்பது அதனாலேயாகும். ஊழல், மோசடி ஆகியவற்றை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மக்களின் தகவல் அறியும் உரிமையினை சட்டமாக்கியது அதனாலேயாகும். கிராமிய இராஜ்யம் என்ற அமைப்பை உருவாக்கி பொது மக்களின் பங்குபற்றலுடன் கூடிய அரசியலமைப்பினை உருவாக்குவது அத்தியாவசியமாகின்றது. அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு அவசியமாகின்றது.

எந்தவொரு செயலும் வெற்றியடைய வேண்டும் எனின் பின்னூட்டல்கள் மற்றும் ஒருங்கிணைப்பு என்பவை அதன் அடிப்படை அம்சமாக அமைய வேண்டும். அரசாங்கங்களுக்கு இடையில் இருங்கிணைப்புகள் காணப்படுவதுடன் அரசாங்கம் மற்றும் தனியார் துறையினருக்கு இடையில் ஒருங்கிணைப்பும் காணப்படல் வேண்டும். இம்முறையினை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.


Add new comment

Or log in with...