ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கை வருகை | தினகரன்


ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கை வருகை

ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கட்ஸுயுகி நகானே (Kazuyuki Nakane) நேற்று (28) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். ஜப்பானிய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்புச் செய்துள்ள ரோந்துப் படகுகளை சேவையில் இணைக்கும் நிகழ்வு இன்று (29) கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்விலும் ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான விரிவான பங்களிப்பு மேலும் வலுப்பெறுவதற்கு இந்த விஜயம் வழிகோலுமென ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...