Friday, March 29, 2024
Home » நல்லூர் கார்த்திகை திருவிழா

நல்லூர் கார்த்திகை திருவிழா

by Prashahini
November 27, 2023 10:13 am 0 comment

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்று (26) மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்று, மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று, வள்ளி, தேவசேனா சமேதராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டது.

தொடர்ந்து நல்லூர் முருகப் பெருமான் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT