ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம் | தினகரன்

ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

 

ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கட்ஸுயுகி நகானே இன்று 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்புச் செய்துள்ள ரோந்துப் படகுகளை சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நாளை 29ம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அவர் தனது விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய அரச தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் கரையோர காவற்படையினருக்கு இரண்டு ரோந்துப்படகுகள் கையளிக்கப்படவுள்ளதுடன் இவை கடற் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் கடல் எல்லை மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளன. ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான விரிவான பங்களிப்பு மேலும் வலுப்பெறுவதற்கு இந்த விஜயம் உறுதுணையாக அமையும் என ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. (ஸ)

 


Add new comment

Or log in with...