யாழ் நூலகத்துக்கு 1.10 இலட்சம் நூல்கள் | தினகரன்

யாழ் நூலகத்துக்கு 1.10 இலட்சம் நூல்கள்

அமைச்சர் செங்கோட்டையன்

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தமிழக அரசு சார்பில் 1.10 இலட்சம் நூல்கள் வரும் செப்டெம்பர் மாதம் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை புத்தகத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இவ்வாறு தெரிவித்தார். இதில் கே.ஏ.செங்கோட்டையன் மேலும் கூறியதாவது:

வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 13,372 அரச பாடசாலைகளில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதை நீடிக்கும் வகையில் இன்னும் 2 மாதங்களில் 32 மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் உருவாக்கப்படும்.

இலங்கையில் நடைபெற்ற கலவரத்தின்போது யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது. அதில் பல இலட்சம் அரிய நூல்கள் எரிந்து சாம்பலாகின. அந்த நூலகத்துக்கு தமிழக அரசு சார்பில் 1.10 இலட்சம் நூல்கள் வழங்க உள்ளோம். யாழ்ப்பாணத்துக்கு செப்டம்பர் 15-ஆம் திகதி செல்லும்போது இந்த நூல்கள் அனைத்தும் நூலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.


Add new comment

Or log in with...