கொழும்பில் மோட்டார் வாகன கண்காட்சி | தினகரன்


கொழும்பில் மோட்டார் வாகன கண்காட்சி

சர்வதேச உற்பத்தியை எடுத்துக்காட்டும் நோக்கில் கொழும்பில் நடத்தப்பட்ட மோட்டார் வாகன கண்காட்சியை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கடந்த 24 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

இக்கண்காட்சியை 2018 எ.எம்.பி டார்சஸ் இவன்ட் குழுமம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு முன்னர் இக்கண்காட்சி பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன உற்பத்தி தொடர்பான கருத்தரங்கும் இக்கண்காட்சியுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றுகையில், மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்காக நாம் பெருந்தொகை பணத்தை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டியுள்ளது. உள்நாட்டிலேயே மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்தால் பணத்தை சேமிக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் இவ்வாறான முயற்சிகளுக்கு உதவுவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

 

 


Add new comment

Or log in with...