மு.க. அழகிரி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் | தினகரன்

மு.க. அழகிரி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல்

கட்சியில் என்னை சேர்க்காவிட்டால் அதற்கான பின்விளைவுகளை தி.மு.க. சந்திக்க வேண்டி இருக்கும் என்று மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வேன் எனவும் மு.க. அழகிரி தெரிவித்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன் னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி செப். 5-ம் திகதி சென்னையில் கருணாநிதி நினைவிடத்துக்கு மௌன ஊர்வலம் செல்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினமும் அவர் ஆதரவாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘அது பற்றி எங்கிட்ட ஏன் கேள்வி கேட்கிறீர்கள். அவரது வேட்பு மனுவுக்கு என்னை முன்மொழியச் சொல்கிறீர்களா’’ எனக் கேட்டார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இடைத் தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்றார்.


Add new comment

Or log in with...