விடுமுறை காலத்தில் பிள்ளைகள் விரும்பும் சுற்றுலாப் பயணம் | தினகரன்

விடுமுறை காலத்தில் பிள்ளைகள் விரும்பும் சுற்றுலாப் பயணம்

பாடசாலை விடுமுறை நாட்கள் என்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் காலமாகும். மூன்று மாதகாலங்களாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஒரே விதமாக காலத்தைக் கடத்திய பிள்ளைகளுக்கு விடுமுறை காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். விசேடமாக தாய்மார்களுக்கு அது தொடர்பாக மிகுந்த பொறுப்புண்டு. விடுமுறையை விளையாட்டுகளில் களிக்க விரும்பும் பி்ள்ளைகள் உல்லாசப் பிரயாணம் செல்லவும் மிகவும் விரும்புவார்கள். விடுமுறை ஆரம்பிக்கும் போதே உல்லாசப் பிரயாணமொன்றை திட்டமிட்டால் விடுமுறை முடிவடைவதற்குள் பிள்ளைகளுடன் நல்ல அனுபவங்களைப் பெறலாம்.

எங்கு செல்வது? எப்போது? எத்தனை நாட்கள்? பிள்ளைகள் முன்னர் சென்றிராத அவர்கள் மிகவும் விரும்பும் இடங்களைத் தெரிவு செய்யுங்கள். விசேடமாக சிறுவர்கள் மகிழ்ச்சியடையும், அவர்களின் அறிவை வளர்க்க உதவும் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் விரும்பக் கூடிய இடமாகத் தெரிவு செய்யுங்கள். போகும் இடத்தை தீர்மானித்த பின்பு அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய தினத்தை தீர்மானியுங்கள். அதே போல் எத்தனை நாட்கள் செலவிட உள்ளோம் என்பது முடிவு செய்யப்பட வேண்டும். தமது பணப்பையால் தாங்கக்கூடிய செலவு மேற்கூறப்பட்ட விடயங்களை முடிவு செய்த பின் முக்கிய விடயமாக அமைகிறது. சுற்றுலாவுக்கான செலவு தொடர்பான கணக்கொன்றை தயாரியுங்கள். அப்போது கையிலுள்ள பணத்திற்கு ஏற்றவாறு செலவு செய்யலாம்.

மகழ்ச்சியாக இருக்கவேண்டிய சுற்றுலாவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது போல் பிரயாணத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். பிரயாணத்துக்கு உபயோகப்படுத்தப்படும் வாகனங்கள் பழுதில்லாமல் இருக்க வேண்டும். அதேபோல் திடீரென ஏற்படும் பழுதுகளுக்கும் முகங்கொடுக்கக் கூடிய வகையில் முன் ஆயத்தம் இருக்க வேண்டும். வாகனங்களை ஒட்டக்கூடிய ஒருவரோ இருவரோ மேலதிகமாகக் காணப்படுவதும் நல்லதாகும். அதேபோல் நாம் கொண்டு செல்லும் பொருட்களில் முதலுதவிப் பெட்டியொன்றையும் கொண்டு செல்லுங்கள். சுற்றுலாவின் இடையில் ஓய்வெடுக்கவும் தவறாதீர்கள். நீண்ட நேரம் ஓடி ஆடி விளையாடுவதால் சிறு பிள்ளைகளுக்கு களைப்பு ஏற்படலாம். அதனால் மயக்கம் வாந்தி போன்ற சிரமங்கள் ஏற்படலாம். அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெளியில் பிள்ளைகள் விளையாடுவார்கள் என்பதால் தொப்பிகள், சப்பாத்துக்களை கொண்டு செல்ல மறக்க வேண்டாம்.

பாதுகாப்பான பயணத்தை

உறுதி செய்வது எவ்வாறு?

 

 

போசணையுள்ள

உணவு வகைகள்;

சுற்றுலாவின் போது திடீர் சுகயீனங்களுக்குக் காரணம் உணவாகும். அதனால் சுற்றுலா செல்லும் போது கொண்டு செல்லும் உணவுகளை மிக கவனமாகத் தெரிவு செய்ய வேண்டும். போதுமான அளவு நீரை கட்டாயமாக கொண்டு செல்லுங்கள். வரட்சியான காலநிலை என்றால் அதிகளவு நீரும் நீர்ச்சத்து அடங்கிய பழங்கள், பானங்கள் அதிகளவு தேவைப்படும். தார்பூசணிப் பழத்தில் அதிகளவு நீர்ச்சத்தும் விட்டமின்களும் அடங்கியுள்ளன. அது சிறு பிள்ளைகளுக்கு மிகவும் விருப்பமானது.

சான்ட்விச்சுகளையும் பிள்ளைகள் விரும்பி உண்பார்கள். சீஸ், ஒலிவ் எண்ணெய் கலந்த சான்ட்விச்சுகள் சிறுவர்கள் இழக்கும் சக்தியை மீள வழங்குகின்றன. அது முந்திரி, பாதாம் போன்ற உலர் விதைகளையும் கொண்டு செல்லலாம்.

இலகுவாக பழுதடையாத நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடிய கொண்டு செல்ல இலகுவான உணவு வகைகளைத் தெரிவு செய்யுங்கள். உணவுகளை பொதியிடும் விசேட பாத்திரங்களில் அவற்றை கொண்டு செல்வதன் மூலம் உணவுகள் பழுதடைவதைத் தடுக்கலாம்.


Add new comment

Or log in with...