வியட்நாமில் இன்று இந்து சமுத்திர மாநாடு ஆரம்பம் | தினகரன்

வியட்நாமில் இன்று இந்து சமுத்திர மாநாடு ஆரம்பம்

வியட்நாமில் இன்று  இந்து சமுத்திர  மாநாடு ஆரம்பம்
இந்து சமுத்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஹெனோய் நகரை சென்றடைந்த போது...
 
 

பிரதமர் ரணில் இன்று உரை

வியட்நாம் ஹெனோய் நகரில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெறவுள்ளதுடன் இலங்கையின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு மேற்படி மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ‘பிராந்தியத்தின் புத்தாக்கத்தை கட்டியெழுப்புதல்’ என்ற தொனிப் பொருளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளதுடன் இம்மாநாட்டில் இந்து சமுத்திர வலயத்தின் மூலோபாயம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. பிராந்தியத்தின் பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் வாணிப செயற்பாடுகள் நிர்வாகத்துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் இச்செயற்பாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து ஆரம்பித்த இந்த வருடாந்த மாநாட்டில் பிராந்தியத்தின் அரச தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். அமைச்சர் சாகல ரத்நாயக்க பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுட ஹெட்டி ஆகியோரும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். (ஸ)

(வியட்நாமிலிருந்து ஷிரோமி அபேசிங்க)

 


Add new comment

Or log in with...