தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி | தினகரன்

தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று ஆற்றி வரும் உரையின் தொடர்ச்சியாக நேற்று மனதின் குரல்- 47ஆவது பகுதியில் ஆற்றிய உரை,

 
 

நாட்டுமக்கள் அனைவருக்கும் ரக்ஷாபந்தன், ஜென்மாஷ்டமிக்கான என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள். இந்த நன்னாள் சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையே அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை முன்னெடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்தப் பண்டிகை பல நூற்றாண்டுகளாக சமூக நல்லிணக்கத்திற்கான பெரிய எடுத்துக்காட்டாகும்.

ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது. அதேபோல வேதகாலம் தொடங்கி இன்று வரை சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம் உள்ளது. உலக வெப்பமயமாதல் முன்வைக்கும் சவால்களை சமாளிக்கும் உத்திகள் நமது வேதங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இவ்வாறு மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

 


Add new comment

Or log in with...