சிறைக்குள் போதைப்பொருள் வீச முற்பட்ட இளம் பெண்கள் கைது | தினகரன்

சிறைக்குள் போதைப்பொருள் வீச முற்பட்ட இளம் பெண்கள் கைது

சிறைக்குள் போதைப்பொருள் வீச முற்பட்ட இளம் பெண்கள் கைது-2 Woman Try to Throw Drugs to Vavuniya Central Jail Arrested
(வைப்பக படம்)

 

வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹொரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (25) மாலை சிறைச்சாலைக்கு அருகே காணப்படும் வீதியில் நின்று சிறைச்சாலை வளாகத்தினுள் போதைப்பொருளை வீச முற்பட்ட சமயத்திலே இவ்விரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் இருவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணிடமிருந்து 12 கிராம் கஞ்சாவும், சாம்பல் தோட்டம் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணிடமிருந்து 140 கிராம் ஹொரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை, மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

 


Add new comment

Or log in with...