மஹிந்தவின் சகோதரருக்கு டக்ளஸ் இறுதி அஞ்சலி | தினகரன்

மஹிந்தவின் சகோதரருக்கு டக்ளஸ் இறுதி அஞ்சலி

மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர், சந்த்ர ராஜபக்‌ஷவுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி-Douglas Devananda Last Respect to Chandra Tudor Rajapaksa

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான சந்த்ர ராஜபக்ஷவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மலர் வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர், சந்த்ர ராஜபக்‌ஷவுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி-Douglas Devananda Last Respect to Chandra Tudor Rajapaksa

மெதமுலனையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா, அங்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான சந்திர ராஜபக்ஷவின் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர், சந்த்ர ராஜபக்‌ஷவுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி-Douglas Devananda Last Respect to Chandra Tudor Rajapaksa

அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அன்னாரின் பிரிவால்  துயருற்றிருக்கும்  உற்றார் உறவினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

சந்த்ர ராஜபக்‌ஷ கடந்த செவ்வாய்க்கிழமை (21) காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...