நல்லூர் கந்தன் மஞ்சத் திருவிழா | தினகரன்


நல்லூர் கந்தன் மஞ்சத் திருவிழா

நல்லூர் கந்தன் மஞ்சத் திருவிழா-Nallur 10th Day Thiruvizha

 

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா  நேற்று (25) சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

நல்லூர் கந்தன் மஞ்சத் திருவிழா-Nallur 10th Day Thiruvizha

சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.

நல்லூர் கந்தன் மஞ்சத் திருவிழா-Nallur 10th Day Thiruvizha

மஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வலம் வருவதை ‘வசந்தோற்சவம்’ என்றும் கூறுவது உண்டு. இந்த மஞ்சத்தில் அண்டவியற் கருத்துக்களும் பௌராணிகர் கருத்துக்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் கந்தன் மஞ்சத் திருவிழா-Nallur 10th Day Thiruvizha

இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அலங்காரக் கந்தன் மஞ்சத்தில் வீதியுலா வந்தனர்.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...