மஹிந்தவின் சகோதரர் சந்த்ர ராஜபக்‌ஷ காலமானார் | தினகரன்

மஹிந்தவின் சகோதரர் சந்த்ர ராஜபக்‌ஷ காலமானார்

மஹிந்தவின் சகோதரர் சந்த்ர ராஜபக்‌ஷ காலமானார்-Chandra Tudor Rajapaksa Passed Away

 

முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரர் சந்த்ர ரியுடர் ராஜபக்‌ஷ காலமானார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு அதிக காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (21) தங்காலை ஆதார வைத்தியசாலையில் காலமானார்.

மரணிக்கும்போது அவருக்கு வயது 70 ஆகும்.

காலம் சென்ற டீ.ஏ. ராஜபக்‌ஷவின் 9 பிள்ளைகளில் ஒருவரான சந்த்ரா ரியுடர் ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அடுத்தபடியாக பிறந்தவர் என்பதோடு, டீ.ஏ. ராஜபக்‌ஷ தம்பதியினரின் நான்காவது புதல்வருமாவார்.

இவர், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சு, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளராக கடமையாற்றியுள்ளதோடு, ஜனாதிபதி ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு சமிந்த ராஜபக்‌ஷ எனும் ஒரேயொரு மகன் உள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷவின் புதல்வர்கள்
1. சமல் ராஜபக்‌ஷ (1939)
2. ஜயந்தி ராஜபக்‌ஷ (1942)
3. மஹிந்த ராஜபக்‌ஷ (1945)
4. சந்த்ர ரியுடர் ராஜபக்‌ஷ (1947)
5. கோத்தாபய ராஜபக்‌ஷ (1949)
6. பசில் ராஜபக்‌ஷ (1951)
7. டட்லி ராஜபக்‌ஷ
8. பிரீத்தி ராஜபக்‌ஷ
9. கந்தனி ராஜபக்‌ஷ
 


Add new comment

Or log in with...