மஹேந்திரனின் பிடியாணை தொடர்பில் விளக்கமளிக்க உத்தரவு | தினகரன்

மஹேந்திரனின் பிடியாணை தொடர்பில் விளக்கமளிக்க உத்தரவு

மஹேந்திரனின் பிடியாணை தொடர்பில் விளக்கமளிக்க உத்தரவு-Aloysius-Palisena Re Remand Till Aug 30

 

அலோசியஸ், பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் கைதான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (23) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில், முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் நாயகம் சட்டத்தரணி திருமதி ஹரிப்பிரியா குணசேகரவினால் மேற்கொண்ட நீண்ட நேர வாத பிரதிவாங்களை அடுத்து,  நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

இந்த வழக்கின் முதலாவது குற்றவாளியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தொடர்பிலான விசாரணைகள் குறித்து எதிர்வரும் நீதிமன்ற அமர்வில் முன்வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

அவர் சிங்கப்பூரில் இருப்பதாகவும், அவர் மீது நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை, சர்வதேச பொலிஸாரின் ஊடாக செயற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து, எதிர்வரும் நீதிமன்ற அமர்வில் முன்வைப்பதாக, மேலதிக சொலிசிட்டர் நாயகம் ஹரிப்பிரியா குணசேகர நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

(சுபாஷினி சேனாநாயக்க)

 


Add new comment

Or log in with...