பாராளுமன்றத்தில் சாதிக்க முடியாதவை ஜனாதிபதி செயலணியில் சாத்தியமாகுமா? | தினகரன்

பாராளுமன்றத்தில் சாதிக்க முடியாதவை ஜனாதிபதி செயலணியில் சாத்தியமாகுமா?

கூட்டமைப்பைத் துளைத்தெடுக்கிறார் விக்கினேஸ்வரன்

தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்காகப் பாராளுமன்றத்தில் எதுவுமே சாதிக்க முடியாத நிலையில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால், ஜனாதிபதி செயலணியில் எவ்வாறு சாத்தியமாக்க முடியும்? என வடக்கு முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாரம் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் முதலமைச்சர், நேற்று ஊடகங்களுக்குப் பதில் அளிக்கும்போது இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். தமிழ் மக்களுக்கு முதலில் அரசியல் தீர்வு, அதன் பின்னரே பொருளாதாரம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், சர்வதேசம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும். அதனைவிடுத்து அபிவிருத்திச் செயலணிக் கூட்டங்களில் அமர்வதால், எந்த நன்மையும் ஏற்படாது என்றும் சுட்டிக்காட்டினார்.

 


Add new comment

Or log in with...