பாத்திமா பாபுவின் மகன் திருமணம்: மணமக்களை வாழ்த்திய ஓ. பன்னீர்செல்வம் | தினகரன்


பாத்திமா பாபுவின் மகன் திருமணம்: மணமக்களை வாழ்த்திய ஓ. பன்னீர்செல்வம்

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் திரைப்படங்களிலும் நடித்து அரசியலையும் ஒரு கை பார்த்து வரும் பாத்திமா பாபுவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை காட்டுப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பாத்திமா பாபுவின் மகன் ஆசிக் பாபு - ஜிஎன் மானஸா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை காட்டுப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீலஷ்மி பிரசன்ன மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக பாத்திமா பாபு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...