கதவருகே நின்று பயணம் செய்ததால் நடந்த சோகம் | தினகரன்

கதவருகே நின்று பயணம் செய்ததால் நடந்த சோகம்

கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆயர் ரயில் பயணத்தின்போது கதவருகே நின்று பயணம் செய்த போது தவறி விழுந்து உயிரிழந்தார்.

குஜராத் சென்ற ஆயர் தோமஸ் ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். எர்ணாகுளம் அருகே நேற்று காலை ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலின் வாசலில் நின்றபடி அவர் பயணம் செய்தார்.

அந்த சமயத்தில் ஆயர் பின்புறம் இருந்த ரயில் பெட்டி கதவு திடீரென வேகமாக மூடியது. இதனால் வெளியே வேகமாக தள்ளப்பட்டு ரயிலில் இருந்து அவர் தவறி விழுந்தார்.

ரயில் சென்ற வேகத்தில் தவறி விழுந்த அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...