மாணவரின் கூச்ச சுபாவத்தை அகற்றுவதில் ஆசிரியரின் பங்கு | தினகரன்


மாணவரின் கூச்ச சுபாவத்தை அகற்றுவதில் ஆசிரியரின் பங்கு

கற்றல், கற்பித்தலில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கின்றனர்.அந்த வகையில் இவர்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்களாவர்.

ஆசிரியர் கற்றலில் மாணவர்கள் பங்குபெற பல வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். கலைத்திட்ட பாடவிதானத்திற்கு ஏற்பவும்,பாடவிதானம் தவிர்ந்த ஏனைய இணைப்பாடவிதான வழிமுறையின் மூலமும் இதனை மேற்கொள்ள முடியும்.

மேலும் நூல்கள் சார்ந்த இந்த ஏட்டுக் கல்வியோடு நின்று விடாது பங்குபற்றல் சார்ந்த கல்வி முக்கியமானதாக இருக்குமாயின் அது மாணவனின் உயர்வில் மிக முக்கிய இடத்தை வகிக்கும். உதாரணமாக பாடசாலையில்,வகுப்பறை கற்பித்தலில் கலைத்திட்ட பாடப் புத்தகத்தின் ஒரு தலைப்பின் கீழ் கற்பிக்கும் கல்வியை அத்தலைப்பின் கீழ் மாணவர்களை தேடச் செய்து அதன் மூலம் கற்பித்தலை மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஆசிரியரால் மாணவர்களை கல்வியில் பங்குபெறச் செய்ய முடிமானதாக இருக்கும்.

மாணவர்கள் குழு விவாதங்களில் கலந்து கொள்ளும் போது தன்னம்பிக்கை ஏற்படுகின்றது. இதன் மூலமாக மனரீதியாக தன்னார்வமும்,தானாக செயற்படும் ஆற்றலும் ஏற்படுகின்றன.அத்தோடு புதிய தேடலும் ஏற்படுகின்றது.

மேலும் பாடவிதானம் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளிலும் மாணவர்களை பங்குபெறச் செய்வதன் மூலமும் சிறந்த பங்குபற்றலை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.அந்த வகையில் விளையாட்டுப் போட்டி,தமிழ்தினப் போட்டி,ஆங்கில போட்டி வினாவிடைப் போட்டி ,வாணிவிழா,பெரியோரின் நினைவு தினம்,சுற்றாடல் கழகம் அமைத்தல்,சுகாதார கழகம்,சாரணர் படையணி,வெளிக்கள ஆய்வு செயற்பாடுகளில் மாணவர்களை பங்கு பெறச் செய்ய முடியும்.

அந்தவகையில் மாணவர்களிடையே பின்வாங்கி ஒதுங்கிப் போகும் தன்மை,சபைக் கூச்சம் போன்றன இல்லாது போவதோடு, ஏனைய மாணவர்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை மற்றும் சகமாணவர்களுடன் குழு செயற்பாடுகளில் இணைந்து கொள்ளும் தன்மை ஏற்படுகின்றது. அத்தோடு சிந்தனைத்திறன்,பேச்சாற்றல்திறன்,முன்வரும் ஆற்றல்,தேடலில் ஈடுபடும் ஆற்றல்,உடல்உளரீதியிலானஆளுமை,கற்பனை வளம் உருவாகுதல் ஏற்படும்.இதனால் தொழினுட்பஅறிவாற்றல் கொண்டவர்களாகவும் சிறந்தபெறுபேறுகளைப் பெறக் கூடியவர்களாகவும் மாணவர் இருப்பர்.

எனவே கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படையில் இருந்தே அறிவையும் அனுபவத்தையும்,ஆற்றலல்களையும் வளர்க்க வேண்டியது கல்விசார் பேராசிரியர்களினதும் அறிஞர்களினதும் கடமையாகும்.

கோ. கோகுலநாதன்
கல்வியியல் சிறப்புக் கற்கை,
கிழக்கு பல்கலைக்கழகம் 


Add new comment

Or log in with...